Google Meet பயன்படுத்துவது எப்படி?

Zoom நிறுவனம் Video Conferencing தொழில்நுட்பத்தில் தனது எளிமையான வடிவமைப்பாலும், வசதிகளாலும் புயல் போல அனைவரையும் சென்றடைந்து விட்டது ஆனால், பாதுகாப்பு குறைபாடுகளால் சர்ச்சையை எதிர்கொண்டது.

இந்நேரத்தில் Mircrosoft Teams களத்தில் போட்டியில் இருந்தது, கூகுள் தன்னுடைய கட்டண சேவையால் போட்டியில் இல்லை. தற்போது இலவச சேவையாக்கியதால், Google Meet பயன்பாடு அதிகரித்துள்ளது.
Google Meet பயன்படுத்துவது எப்படி?



இதைப்பயன்படுத்த எந்தத் தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. எவரும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.



ஜிமெயில் உள்ளே இடது பக்கம் Start a meeting / Join a Meeting வசதிகள் இருக்கும்.

Meeting உருவாக்க என்றால், Start a meeting க்ளிக் செய்து Join Now கொடுத்தால் போதும். அதுவே Meeting ID கொடுக்கும். அதை மற்றவர்களுக்குக் கொடுத்து Join பண்ண வைக்கலாம்.

விருப்பப்படுவர்கள் மின்னஞ்சல்களைக் கொடுக்கலாம் (Add People).

மற்றவர்கள் கொடுத்த Meeting ID யில் நுழைய வேண்டும் என்றால், Join a Meeting தேர்வு செய்ய வேண்டும்.

https://meet.google.com/ Link தளம் வழியாகவும் பயன்படுத்தலாம்.

Google Meet பயன்படுத்த இவை தெரிந்தாலே போதும்.
கூடுதல் தகவல்கள்



எளிமையான வடிவமைப்பாக உள்ளது.

Google Hangouts என்ற பெயரில் இருந்து Google Meet என்று மாற்றம் பெற்றது.

இலவசமாக 30 செப்டம்பர் 2020 வரை பயன்படுத்தலாம், பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறைவான வெளிச்சத்திலும் காணொளியை வெளிச்சமாகக் காட்டும் தொழில்நுட்பம் உள்ளது.

காணொளி 360P (Standard Definition) மற்றும் 720P (High Definition) தரத்தில் உள்ளது.

குறைவான Data எடுக்கிறது.

முகப்பிலேயே Mic / Video Enable Disable செய்யும் வசதியுள்ளது.

Caption Enable செய்தால், ஆங்கிலத்தில் பேசுபவர்களது பேச்சைச் சப்டைட்டில் போலத் தரும்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதி உள்ளது.

Meeting Create செய்யக் கூகுள் கணக்குத் தேவை, Join பண்ண தேவையில்லை.

கணினி உலவியில் (Browser) பயன்படுத்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. மொபைலில் பயன்படுத்த Google Meet செயலியை நிறுவ வேண்டும்.

ஒரு Meeting ல் அதிகபட்சம் 250 பேர் வரை ஒரே சமயத்தில் இணையலாம்.

நம் கணினியை மற்றவர்களுக்கு Present செய்யும் வசதியுள்ளது.

Chat வசதியில் ஏதாவது தட்டச்சு (TYPE) செய்தால், அதில் உள்ள அனைவரையும் சென்றடையும்.

Layout மாற்றிக்கொள்ளலாம், இதன் மூலம் கூடுதல் பயனாளர்களின் முகங்களைக் (Profile Pic) காண முடியும்.

தினமும் 3 மில்லியன் புதிய பயனாளர்களை GoogleMeet பெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்தியா Google Play Store ல் 50 மில்லியன் தரவிறக்கத்தை கடந்துள்ளது.

Microsoft Teams 75 மில்லியன் பயனாளர்களாலும், Zoom 300 மில்லியன் பயனாளர்களாலும் தினமும் பயன்படுத்தப்படுகின்றன.