முருங்கை பட்டை மருத்துவ பலன்கள்

 முருங்கை பட்டையானது, முழுக்க முழுக்க வைத்தியத்துக்கு பயன்படுத்தக்கூடியது.. 


🦋பெரும்பாலும், முருங்கை பட்டையை உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்வார்கள். தலைவலி, காய்ச்சலுக்கு, மூட்டுவலி போன்றவைகளுக்கு பட்டை பொடி பலனை தரும். 


🍃நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டையை வாரத்தில் ஒருநாளாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.


☘️முருங்கை வேர் + பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் 


🍁முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும். 


🌺அதேபோல, இந்த பட்டையை இடித்து வீக்கங்கள், கட்டிகள், புண்கள் மீது வைத்து கட்டினால், வீக்கம் குறையும்... கட்டியும் குறையும்.. 


🌿பட்டையின் மேலுள்ள தோலை நீக்கிவிட்டு, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த தண்ணீர், பலவித பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடியது..


🌱உள்ளுறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.. ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது.. அதனால், ரசம் அல்லது சூப் போல செய்து மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.. 


🪸இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.. வயிற்றில் புண் இருந்தாலும் ஆற்றிவிடும்..!