யாருக்கெல்லாம் ரூ 1000 உரிமைத் தொகை

 யாருக்கெல்லாம் ரூ 1000 உரிமைத் தொகை


மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்போர் 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் ஆனால் உரிமை தொகை பெற வயது உச்சவரம்பு ஏதும் கிடையாது.


ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு மகளிருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்


மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கும் மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம்


குடும்ப அட்டை எந்த பகுதியில் உள்ளதோ அப்பகுதியில் மட்டுமே உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்


உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் மகளிரின் குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.


5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து இருக்க கூடாது


வீட்டில் கார் வைத்து இருக்க கூடாது


வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.


பெண் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது


3000 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.


மகளிர் உரிமைத் தொகையை பெற உள்ள பயனாளர்களின் ஆதார் எண் - குடும்ப அட்டை இணைப்பதன் மூலம் ஒரே நபர் இரண்டு முறை வாங்குவதை தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.