Showing posts with label ரூ.1000 உரிமைத் தொகை. Show all posts
Showing posts with label ரூ.1000 உரிமைத் தொகை. Show all posts

ரூ.1000 உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவரா என குடும்ப தலைவிகளின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




ரூ.1000 உரிமைத் தொகை:

தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ள நிலையில் 16ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் தீவிர ஆய்வு செய்யப்பட்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தான தகவல்கள் குடும்பத் தலைவியின் மொபைல் எண்ணிற்கே நேரடியாக அனுப்பப்படுகிறது.



எனவே, விண்ணப்பத்தினை குடும்பத் தலைவிகள் ஒப்படைத்த பிறகு தமிழக அரசின் சார்பில் ஏதேனும் குறுஞ்செய்தி வந்துள்ளதா என அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், குடும்பத் தலைவிகள் மேல் முறையீடு செய்யப்படும் பட்சத்தில் அதிகாரிகள் வீட்டிற்கு நேரில் வந்து கள ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.